
அர்ஜுன் தாஸின் 'ஜான் டோ' சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
மதுமிதா இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் 'ஜான் டோ' திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளது. அர்கா மீடியா வொர்க்ஸ் தயாரிக்கும் இக்கரைம் த்ரில்லர் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், படத்தின் கதாபாத்திர போஸ்டர்களும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. முஜீப் மஜீத் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.




