
காவல்துறைக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு கைது.
சென்னை ஐ.பி.எல். போட்டியின் போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையில், தமிழக மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன் மற்றும் கௌதம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் தவெக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற போது காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.









