ஒருநாள்
கிரிக்கெட் போட்டிகளில் 3-வது வரிசையில் களமிறங்கி 13,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதுவரை 3-வது வரிசையில் விளையாடி கோலி 13,062 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 12,662 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரை முந்தி கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக இன்று (நவ.4) நடந்த போட்டியின் மூலம் இந்த சாதனையை கடந்துள்ளார்.