
SIRக்கு எதிரான இந்தியா கூட்டணி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
வாக்காளர் பட்டியல் முறைகேடு மற்றும் சிறப்பு தீவிர திருத்தப் பணியான SIRக்கு எதிராக இந்தியா கூட்டணி தலைவர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு, நாளை (அக்.15) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரிக்க உள்ளது.




























