
செங்டு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்
சீனாவில் நடைபெற்ற செங்டு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போலந்தின் ஹியூபர்ட் ஹுர்காக்ஸை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6-4, 7-6(7) என்ற நேர் செட் கணக்கில் ஹுர்காக்ஸை வீழ்த்தி டேவிடோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். முன்னதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலியை வீழ்த்தி டேவிடோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




