உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷாஹரில், டெல்லி போலீஸ் மற்றும் நொய்டா எஸ்டிஎஃப் இணைந்து நடத்திய என்கவுண்டரில் நசீம் துர்ரானி என்ற பிரபல குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டான். டெல்லி அமைச்சர் கபில் மிஷ்ராவின் அலுவலகத்திற்கு வெளியே சமீீர் என்ற இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் இவன் தேடப்பட்டு வந்தான். நசீம் தலைக்கு 50,000 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. சோட்டா ராஜனைக் கொல்லத் திட்டமிட்டதாக அவன் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கையில் நசீம் கொல்லப்பட்டான்.