நேபாள பெருவெள்ளம்: பீகாரில் மீன் பிரியர்களுக்கு எச்சரிக்கை

1703பார்த்தது
நேபாள பெருவெள்ளம்: பீகாரில் மீன் பிரியர்களுக்கு எச்சரிக்கை
நேபாள நதிகளில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக பீகார் ஆறுகளுக்கு அடித்து வரப்படும் புதிய வகை மீன்களை உண்பதால் வயிற்று வலி, வாந்தி மற்றும் சுவாசக்கோளாறுகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. நோய்த்தொற்று அபாயம் கொண்ட இந்த மீன்களை பொதுமக்கள் உண்பதை தவிர்க்குமாறு பீகார் மாநில கால்நடைத்துறை அமைச்சர் நந்த் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த மீன்களை பிடிப்பதையும் விற்பனை செய்வதையும் உடனடியாக நிறுத்துமாறு மீனவர்களுக்கும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி