மதுரை வாடிப்பட்டி அருகே கார் மோதி புதுமணப்பெண் ஒருவர், மணமகனின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். மரிய வெல்சியா (26), ஜெப பாஸ்டின் ஜோடிக்கு நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், செவிலியர் தேர்வு எழுதுவதற்காக வெல்சியாவை, ஜெப பாஸ்டின் பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது, கார் ஒன்றின் டயர் வெடித்து இவர்கள் பைக்கில் மோதியதில், தூக்கி வீசப்பட்ட வெல்சியா உயிரிழந்தார். காயமடைந்த மணமகன் ஜெப பாஸ்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.