தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெறத் தகுதியற்றவர்கள் குறித்த விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், வருமான வரி அல்லது தொழில் வரி செலுத்துபவர்கள், சொந்தமாக 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள். அரசு ஊழியர்கள், குறிப்பிட்ட அளவு மின்சாரம் பயன்படுத்துவோர் மற்றும் நிலம் வைத்துள்ளவர்கள் எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஏற்கனவே பிற திட்டங்களில் பலன் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.