இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்தவர் வ.உ.சிதம்பரனார். 1872-ம் ஆண்டு செப்.5-ம் தேதி தூத்துக்குடியின் ஒட்டப்பிடாரத்தில் பிறந்த இவர், ஆங்கிலேயர்களின் கப்பல்
போக்குவரத்து ஆதிக்கத்தை எதிர்த்து 1906-ம் ஆண்டு சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதற்காக சிறை தண்டனை அனுபவித்ததுடன், சிறையில் செக்கிழுக்கும் கொடுமைக்கும் ஆளானார். 1936-ம் ஆண்டு நவ.18-ம் தேதி மறைந்த அவரின் 90-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.