சிப்ஸ் பாக்கெட்டில் காற்று நிரப்புவது ஏன்?

47பார்த்தது
சிப்ஸ் பாக்கெட்டில் காற்று நிரப்புவது ஏன்?
சிப்ஸ் பாக்கெட்டில் அதிக எண்ணிக்கையில் சிப்ஸ் வைக்கும்போது அவை உடைந்து நொறுங்கி விடாமல் பாதுகாக்கவே காற்று நிரப்பப்படுகிறது. இதற்காக ஆக்ஸிஜனுக்கு பதிலாக நைட்ரஜன் வாயு நிரப்பப்படுகிறது; ஏனெனில் ஆக்ஸிஜன் எளிதில் வினைபுரிந்து சிப்ஸை நமத்து போகவும், கெட்டு போகவும் செய்துவிடும். இதன் மூலம் சிப்ஸ் சுவையும் தரமும் மாறாமல் வாடிக்கையாளர்களை சென்றடைகிறது. மேலும், ஈரப்பதம் உள்ளே நுழைவதை தடுத்து, சிப்ஸின் மொறுமொறுப்பு நீண்ட நாள் நீடிக்கவும் இந்த நைட்ரஜன் வாயு பெரிதும் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி