ஜார்க்கண்டின் லோஹர்தாகா பகுதியில் சோனு லஹ்ரி என்பவர் தனது மனைவி பூஜா மற்றும் அவரது பேஸ்புக் காதலன் ரோஹித்தை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இரவு கணவர் வெளியே சென்றிருந்த சமயம், மனைவி தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்திருந்தார். ரகசியத் தகவலால் நள்ளிரவில் வீடு திரும்பிய கணவர், இருவரையும் படுக்கையறையில் கண்ட நிலையில் ஆத்திரமடைந்து, கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.