முன்னாள் ராணுவ வீரரைக் குத்திக் கொன்ற மனைவி

15பார்த்தது
முன்னாள் ராணுவ வீரரைக் குத்திக் கொன்ற மனைவி
குஜராத்தின் அகமதாபாத் நரோடாவில் வியாழக்கிழமை நள்ளிரவில், வீட்டில் சமைத்த உணவு பற்றி வாக்குவாதத்தில் கணவர் திலீப் காரடியை (39), மனைவி நிர்மலா காராடி (34) கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற ராணுவ வீரரான திலீப், ஜிஎம்டிசி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இத்தம்பதியினரிடையே கடந்த ஓராண்டாகவே குடும்ப மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து மோதல் இருந்து வந்துள்ளது. தற்போது மனைவி நிர்மலா கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி