மதுரையில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பா?.. TN IID மறுப்பு

32பார்த்தது
மதுரையில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பா?..  TN IID மறுப்பு
மதுரையில் இன்று வெடிக்காத நிலையில் 12 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தமிழக அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு மறுத்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமன் என்பவர் தனது எக்ஸ் பதிவில், எனது தகவல்களின்படி, மதுரையில் இன்று வெடிக்காத நிலையில் 12 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தேசிய புலனாய்வு முகமை தயவுசெய்து இதில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 'இது முற்றிலும் தவறான தகவல்' என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி