வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் வெடித்து விபத்து.. பெண் பலி

20பார்த்தது
வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் வெடித்து விபத்து.. பெண் பலி
சென்னை கொரட்டூரில் உள்ள வீட்டில் இன்று (நவ.1) அதிகாலை ஃப்ரிட்ஜ் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் அகிலா தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது கணவர் மற்றும் மகன் தீக்காயங்களுடன் வீட்டிலிருந்து வெளியேறி உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த அகிலாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி