அமெரிக்காவின் நியூயார்க் அல்பேனியில், தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது அக்ஷிதா என்ற பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பிரபல தொழிலதிபர் நல்லமலா ஆனந்தின் மகளான அக்ஷிதா, இரவு நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை. தற்போது அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.