மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் சிடோங்கில், செப்டம்பர் 13 அன்று தங்கியிருந்த ஹோம்ஸ்டே ஒன்றில் பார்பிக்யூ செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில், நிகிதா சாஹா என்ற புதுமணப்பெண் படுகாயமடைந்தார். சோப்ரா பகுதியைச் சேர்ந்த சமீர் தாஸைத் திருமணம் செய்த 2 மாதங்களிலேயே இந்தத் துயரம் நிகழ்ந்தது. சிலிகுரி மற்றும் கொல்கத்தாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். சுற்றுலாத் தலங்களில் உள்ள விடுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பெரும் விவாதத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.