சீர்காழி அருகே வீடு தீப்பற்றி எரிந்து பெண் பலி

0பார்த்தது
சீர்காழி அருகே வீடு தீப்பற்றி எரிந்து பெண் பலி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீராநல்லூர் கிராமத்தில் தனியாகக் குடிசை வீட்டில் வசித்து வந்த நூர்ஜகான் (60), நள்ளிரவு 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்த நிலையில், வீரர்கள் தீயை அணைப்பதற்குள் வீடு எரிந்து சாம்பலானது. சம்பவ இடத்திலேயே பலியான நூர்ஜகானின் உடலைக் கைப்பற்றிய சீர்காழி போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி