கணவருடன் சென்ற பெண் லாரி மோதி உயிரிழப்பு

4பார்த்தது
கணவருடன் சென்ற பெண் லாரி மோதி உயிரிழப்பு
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மதுரவாயலை சேர்ந்த நிர்மலா (50) என்பவர் மீது குடிநீர் வடிகால் வாரிய லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய பின் வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி