திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வயலில் கூலி
வேலை செய்து விட்டு வரப்பில் நடந்து வந்த முத்தம்மாள் (55) பெண் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சக தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, இறப்பை உறுதி செய்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில், கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.