சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, மகளிர் நலன் மற்றும் உரிமைத் தொகையால் பயன்பெறும் பெண்களின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500-ஆக உயர்த்துவது குறித்த முக்கிய அறிவிப்பை முதல்வர்
விஜய் விரைவில் வெளியிட உள்ளதாகவும் அமைச்சர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.