ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்சுலினை கண்டுபிடித்த சர் ஃப்ரெடெரிக் பாண்டிங் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, 1991-ல் சர்வதேச நீரிழிவு சம்மேளனம் மற்றும் உலக சுகாதார அமைப்பால் இது தொடங்கப்பட்டது. பின்னர் 2006-ல் ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நாளின் முக்கிய நோக்கம் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்துவதாகும்.