யோ யோ ஹனி சிங்கின் மருமகன் உயிரிழப்பு

9பார்த்தது
யோ யோ ஹனி சிங்கின் மருமகன் உயிரிழப்பு
பஞ்சாபின் ஜலந்தரில் நிகழ்ந்த சாலை விபத்தில், பாடகர் யோ யோ ஹனி சிங்கின் மருமகன் விதித் ஓலாக் மற்றும் 'பாப்பி ஸ்வீட்ஸ்' உரிமையாளரின் மகன் ஆரவ் தல்வார் ஆகிய இருவர் உயிரிழந்தனர். நண்பரின் பிறந்தநாள் விழாவிலிருந்து திரும்பியபோது, அவர்கள் சென்ற கார் போலீஸ் லைன்ஸ் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த மாநகராட்சி டிராக்டர் மீது மோதியது. பாடகர் யோ யோ ஹனி சிங், தமிழில் அனிருத் இசையில் 'எதிர்நீச்சல்' படத்தில் பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி