பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் வாளுடன் பல்வேறு ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த ஷாருக்கான் (24) என்ற இளைஞரை ராமேஸ்வரம் போலீசார் கைது செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதமாகவும் இதுபோன்று தொடர்ச்சியாக ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.