தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி இளைஞர் பலி

2081பார்த்தது
தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி இளைஞர் பலி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டி ஆத்துப்பட்டி தடுப்பணையில் குளித்தபோது, நீச்சல் தெரியாததால் கோகுல் ராஜா (23) என்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். நூற்பாலையில் விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அணைக்கு சென்ற இடத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி