திருவள்ளூர் மாவட்டம் பாகல்மேடு பகுதியைச் சேர்ந்த
மாரி என்பவர், வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் ஓட ஓட பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.