இளைஞர் உயிரிழந்த விவகாரம்: 2 நடனக் கலைஞர்கள் கைது

16பார்த்தது
இளைஞர் உயிரிழந்த விவகாரம்: 2 நடனக் கலைஞர்கள் கைது
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, சப்னா ராவத், நேஹா பர்வீன் ஆகிய 2 பெண் நடனக் கலைஞர்களை தாக்கூர் கஞ்ச் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இறப்பதற்கு முன் அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோவில், இந்த பெண்கள் இருவரும் தம் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாரா காவல் நிலையக் போலீசார் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி