
ரசிகர்களை மகிழ்விப்பதே என் வேலை: அனுபமா பரமேஸ்வரன்
தனது சமீபத்திய பதிவுகள் சோகத்தை பிரதிபலித்ததாகவும், காதல் தோல்வியில் இருந்ததாகவும் வெளியான தகவல்களைத் தொடர்ந்து, நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது மீண்டும் உற்சாகத்துடன் காணப்படுகிறார். அவர் கூறுகையில், "மகிழ்ச்சியும் சோகமும் வாழ்க்கையில் சகஜம். அதற்காக நிகழ்காலத்தை தொலைக்கக்கூடாது. எப்போதும் போல ரசிகர்களை மகிழ்விப்பதே என் வேலை. நான் தங்கமான பொண்ணு என்பது ரசிகர்களுக்கு தெரியும். அவர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் நடித்து பரவசப்படுத்துவேன்" என்று தெரிவித்துள்ளார்.
















