
பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி
இந்திய பங்குச்சந்தை இன்று வர்த்தக நிறைவில் சரிவை சந்தித்துள்ளது. சென்செக்ஸ் குறியீடு 429.11 புள்ளிகள் குறைந்து 72,638.70 புள்ளிகளாகவும், நிப்டி குறியீடு 173.05 புள்ளிகள் சரிந்து 22,603.05 புள்ளிகளாகவும் இருந்தது. டைட்டன், அதானி என்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. கோடக் மகிந்திரா வங்கி, பாரதி ஏர்டெல் உள்ளிட்டவை லாபம் கண்டன.



































