அஇஅதிமுக-AIADMK

அதிமுக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை

அதிமுக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், 1.11.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் மாவட்டக் கழகச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கழகப் பொதுச் செயலாளரின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.