அஜித்குமார்-Ajith Kumar

தமிழக முதலமைச்சர் லண்டன் பயணம்: கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார்

தமிழக முதலமைச்சர் லண்டன் பயணம்: கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் 6 நாள் அரசுமுறை பயணமாக லண்டன் சென்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் (10-ந் தேதி) இரவு துபாய் வழியாக லண்டன் சென்றடைந்தார். லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் அவருக்கு பிரிட்டன் தமிழ் சங்க தலைவர் ஜேக்கப் ரவிபாலன், த.வெ.க. துரை கண்ணன் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் வரவேற்பு அளித்தனர். இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, இன்று புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத்திடலில் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை அவர் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். நடிகர் அஜித்குமார் மற்றும் முன்னணி இந்திய கார் பந்தய வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கி 11.45 மணிக்கு நிறைவடைகிறது.