
ஆந்திராவில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு: ரிலையன்ஸ் அறிவிப்பு
ஆந்திராவின் மதனப்பள்ளியில் ராயலசீமா தோட்டக்கலைத்துறை மையம் மற்றும் இந்திய வேளாண் பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் நேற்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செயல் இயக்குனரும், முகேஷ் அம்பானியின் மகனுமான ஆனந்த் அம்பானி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆந்திராவில் அழுத்தப்பட்ட உயிரிவாயு ஆலைகள் அமைக்க ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் கூறினார்.



































