அமித்ஷா-Amit Shah

"விவாதம் நடத்த நாங்கள் தயார்".. ராகுல் காந்திக்கு அமித்ஷா சவால்

"விவாதம் நடத்த நாங்கள் தயார்".. ராகுல் காந்திக்கு அமித்ஷா சவால்

“பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியுடன் பொதுவெளியில் விவாதிக்கத் தயாரா?” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பிரதமர் மோடியுடன் விவாதிக்கத் தேவையில்லை, நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம். அரியானாவில் நடைபெற்ற பாஜக பேரணியில் பேசிய அவர், சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்டி SIR குறித்து விவாதிக்கத் தயார்" என்றார். இதற்காக ராகுல் காந்தி கடிதம் எழுதினால் கூட்டத்தொடரைக் கூட்டுவோம் என்றும் கூறினார்.