
இனி தவெக-வுக்கு எம்எல்ஏ-க்கள் போகக்கூடாது: வேலுமணிக்கு அட்வைஸ்
அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வர டெல்லி பாஜக தலைமை நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக ஆட்சி அமைப்பதில் எஸ்.பி.வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2029 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்ய டெல்லி மேலிடம், அதிமுகவை வலுப்படுத்தும் பொறுப்பை எஸ்.பி.வேலுமணியிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இனி அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு செல்வதை தடுக்கும் பொறுப்பும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளதாம்.


































