சென்னை மெட்ரோ-Chennai Metro

தீபாவளி: சொந்த ஊர் நோக்கி படையெடுக்கும் பயணிகள் - அமைச்சர் ஆய்வு

தீபாவளி: சொந்த ஊர் நோக்கி படையெடுக்கும் பயணிகள் - அமைச்சர் ஆய்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் பணிபுரியும் மக்கள் சொந்த ஊர் செல்ல நேற்று முதல் பயணம் மேற்கொண்டனர். இதற்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று மட்டும் அரசுப் பேருந்துகளில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், தனியார் பேருந்துகளில் 60 ஆயிரம் பேரும் என மொத்தம் 2 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். போக்குவரத்து அமைச்சர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு ஆய்வு செய்து, பயணிகளுக்குத் தேவையான வசதிகளைக் கேட்டறிந்தார்.