
திமுகவுக்கு ஆதரவாக இபிஎஸ் பேசுகிறார்: அமைச்சர் நிர்மல்குமார்
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் திமுக ஆகிய இரு தரப்பும் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் சாடியுள்ளார். தற்போதைய நிலையில் அதிமுகவில் வெறும் 10 பேர் மட்டுமே உள்ளதாக தெரிவித்த அவர், இபிஎஸ் முதலில் தனது கட்சியில் உள்ள உட்கட்சி பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், தன் பக்கம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை காட்டி கொள்வதற்காக இபிஎஸ் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.



































