
“பாஜகவின் சி திட்டம் தான் தனுஷ்".. மாணிக்கம் தாகூர் மறைமுக விமர்சனம்
தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை பாஜக தனது திட்டத்தில் பயன்படுத்த முயன்றதாகவும், அண்ணாமலை பாஜகவின் ‘பி’ திட்டம் என்றும் குறிப்பிட்டார். தற்போது ‘சி’ திட்டமாக ஒரு நடிகரைத் தயார்படுத்தி வருவதாக நடிகர் தனுஷை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.



































