
வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: அதிரடியாக தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ்
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 28ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி டாக்கா மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, ஷதிமென் இஸ்லாமின் 105 ரன்கள் உதவியுடன் முதல் இன்னிங்சில் 272 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஜோமல் வாரிகன் அபாரமாக செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்காளதேசத்தை கட்டுப்படுத்தினார்.



































