தனுஷ்-Dhanush

அடுத்த வாரம் தொடங்குகிறது தனுஷின் ‘டி56’ படப்பிடிப்பு

அடுத்த வாரம் தொடங்குகிறது தனுஷின் ‘டி56’ படப்பிடிப்பு

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘டி56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்ட இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கடந்த செப். 25-ம் தேதி சிவகங்கை மாவட்டம் மாரநாடு கருப்பணசாமி கோவிலில் படத்தின் பூஜை நடைபெற்றது.