
ஒரு டிரில்லியனும் வராது.. சி.வி.சண்முகம் பேச்சு
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை திமுக அரசும், திமுக அரசு கொண்டுவந்த பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தவெக அரசும் ரத்து செய்துள்ளது என அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார். எல்லாவற்றிலும் அரசியல் செய்து கொண்டு வளர்ச்சித் திட்டங்களை ரத்து செய்துகொண்டே போனால் தமிழ்நாட்டிற்கு ஒரு டிரில்லியன் பொருளாதாரமும் வராது, ஒன்றரை டிரில்லியன் பொருளாதாரமும் வராது என அவர் காட்டமாகக் கூறினார். நன்றி: நியூஸ் 18



































