
பள்ளி விளையாட்டு விழாவில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பங்கேற்பு
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஹோலி கிராஸ் தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில், தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் அமைச்சரும் ஆர்வமுடன் பங்கேற்றார்.



































