
தினமும் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்ட மாணவி பரிதாப பலி
உத்தரப் பிரதேசம் அம்ரோஹாவைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி அஹனா (16), நீண்ட காலமாக துரித உணவுகளை அதிகம் உட்கொண்டதால் ஏற்பட்ட கடுமையான உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். பீட்சா, பர்கர், நொறுக்குத் தீனிகள் போன்ற உணவுகள் காரணமாக குடல் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டும், இதய செயலிழப்பால் உயிர் பிரிந்தது. துரித உணவு பழக்கம் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.















