நீட்-NEET

உயர்கல்வியில் மாணவர் தற்கொலைகள் அதிகரிப்பு: நிர்வாக அலட்சியம் அம்பலம்

உயர்கல்வியில் மாணவர் தற்கொலைகள் அதிகரிப்பு: நிர்வாக அலட்சியம் அம்பலம்

சமீபத்திய ஆய்வின்படி, உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 9% பேர் தற்கொலை எண்ணங்களையும், 15% பேர் மன உளைச்சலையும் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நாட்டின் 32% உயர்கல்வி நிறுவனங்களில் அடிப்படை மனநல ஆலோசனைக் கட்டமைப்புகள் இல்லாதது நிர்வாகங்களின் அலட்சியத்தைக் காட்டுகிறது. பா.ஜ.க. ஆட்சியமைந்ததிலிருந்து உயர்கல்வியில் மாணவர் தற்கொலை விகிதம் கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 61% உயர்ந்துள்ளன. 2018 முதல் 2023 வரை முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து 13,600-க்கும் மேற்பட்ட எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நீட், ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ரேங்க்குகள் காட்டி நடக்கும் சாதிய ஒடுக்குமுறைகளும், பாலியல் துன்புறுத்தல்களும் மாணவர்களைத் தற்கொலை விளிம்பிற்குத் தள்ளுகின்றன.