
புதிய ராணுவ கூட்டணி அமைத்த பாகிஸ்தான், துருக்கி, இந்தோனேசியா, கத்தார்
பாகிஸ்தான், துருக்கி, இந்தோனேசியா மற்றும் கத்தார் ஆகிய 4 நாடுகள் இணைந்து ராணுவ உற்பத்தி, நவீன தொழில்நுட்ப பகிர்வு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக 'பத்ர்' என்ற புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே பரஸ்பர ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், NATO அமைப்பில் 2-வது பெரிய ராணுவத்தை கொண்டுள்ள துருக்கியின் பங்கேற்புடன் இந்த புதிய கூட்டணி உருவாகியுள்ளது.



































