
விசிக நிர்வாகி கொலை சம்பவத்தில் 7 பேர் கைது
விசிக நிர்வாகியும், சரித்திர பதிவேடு குற்றவாளியுமான அன்பழகன் நேற்று (ஆக.28) வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வீனஸ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே, அன்பழகனை வீனஸ் தரப்பினர் திட்டமிட்டு கொலை செய்தது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய எஞ்சிய நபர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நன்றி:News18



































