-Ram charan

தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறது - வேல்முருகன் காட்டம்

தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறது என்று தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மார்ச் 22) செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், 2 தொகுதிகள் கேட்ட நிலையில் 1 தொகுதி மட்டுமே ஒதுக்குவதாக திமுக தரப்பு முன்வந்ததாகவும் கூறினார். தமிழர் அல்லாத அதிகாரிகளின் பேச்சை கேட்டு தங்களை புறக்கணித்ததாகவும் குற்றம்சாட்டினார். பெரியண்ணன் பாணியில் திமுக தங்களை நடத்துவதை ஏற்க முடியாது என்றும் கூறினார். நன்றி: Pttv