
200-க்கும் மேற்பட்டோர் மஜகவில் இணைந்தனர்
திண்டுக்கல்லில் மனிதநேய ஜனநாயகக் கட்சியில் நேற்று 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA., முன்னிலையில் இணைந்தனர். புதிதாக இணைந்த இளைஞர்களுக்கு கட்சி துண்டுகள், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள விடுதலைப் போராட்ட மன்னர்கள் ஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபத்தில் 'வன்முறை மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதி மொழியை' ஏற்ற பின் திரளானோர் இருசக்கர வாகன பரப்புரையில் ஈடுபட்டனர்.



































