பணியமர்த்தல்-Recruitment

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: திருச்செங்கோடு நகராட்சியில் பணிகள் பாதிப்பு

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: திருச்செங்கோடு நகராட்சியில் பணிகள் பாதிப்பு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி செவ்வாய்க்கிழமை அன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை முன்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சியின் பல்வேறு வார்டுகளில் தூய்மைப் பணிகள் மற்றும் குப்பை சேகரிப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.