
ஓவியா-ராஜாபிரபு நடிப்பில் உருவாகும் “கிளிக்” திரைப்படம்
'களவாணி' புகழ் நடிகை ஓவியாவும், நடிகர் ராஜாபிரபுவும் இணைந்து நடிக்கும் 'கிளிக்' என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில், ஜே.ஆர்.பி. இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஸ்மிதா, அமுதவாணன் மற்றும் 'லொள்ளு சபா' மனோகர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.



































