
மீசைய முறுக்கு 2: இரட்டை வேடத்தில் ஹிப் ஹாப் ஆதி!
ராப் பாடகராக அறிமுகமாகி, இசையமைப்பாளர், நடிகர், இயக்குநராக வலம் வரும் ஹிப்ஹாப் தமிழா ஆதி, 'மீசைய முறுக்கு' படத்தின் இரண்டாம் பாகத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி - குஷ்பு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கல்லூரி மாணவனின் கனவு, காதல், போராட்டங்களை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



































